ஜீவிக்கும் போது, மரிக்கும் போது, அடக்கம் பண்ணப்பட்ட போது, உயிர்த்தெழுந்த போது, வரும் போது 59-0329S 1. இன்றைக்கு நாங்கள் இந்த மிக பயபக்தியான, புனிதமான காலை வேளையில் இங்கு கூடி வந்திருக்கையில், எப்படியாய் எங்களுடைய இருதயங்கள் உள்ளுணர்வு கொள்ளுகின்றனவென்பதைக் குறித்து மானிட மொழிகளில் நாங்கள் வெளிப்படையாய்க் கூற முடிந்த எந்த காரியத்திற்கும் அது அப்பாற்பட்டதாயிருக்கிறது. எங்களுடைய மார்க்கமானது உண்மைப் பொருளாயாக்கப்பட்ட அந்த நேரத்தை இந்தக் காலை சுட்டிக் காட்டுகிறது, ஏனென்றால் அது முழு மானிட வர்க்கத்தையும் மீட்கும்படியாய் வந்த உம்முடைய விலையேறப்பெற்ற பிள்ளை மறுபடியும் எழும்பினதாய் இருக்கிறது. கர்த்தாவே, நாங்கள் இந்த காலை அந்த மகத்தான கொண்டாட்டத்தின் வெற்றிவாகை விழாவில் இங்கிருக்கிறோம், அது எங்களுடைய மரணம், நரகம், பாதாளம் ஆகியற்றில் ஜெயங்கொண்டவர்களாக ஆக்கினது. இத்தனை ஆண்டுகள் கடந்த பிறகும், நாங்கள் இன்னமும் இந்த உயிர்த்தெழுந்த காலையில் அவரை ஆராதிக்கும்படி அதிகாலையில் கூடி வந்திருக்கிறபடியால், நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம், ஏனென்றால் அவர் மீண்டும் வருவார் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். 2 நாங்கள் தாழ்மையாய் எங்களுடைய தவறை அறிக்கை செய்து, எங்களுடைய பாவங்களுக்காக அவருடைய பாவ நிவிர்த்தியை ஏற்றுக்கொள்ளுகின்ற காரணத்தால் எங்களுக்கு எதிராக குறித்து வைக்கப்பட்டிருக்கின்ற எங்களுடைய எல்லா பாவங்களையும், எங்களுடைய தப்பிதங்களையும் நீர் மன்னிக்கும்படியாய் நாங்கள் ஜெபிக்கிறோம். கர்த்தாவே, எங்கள் மத்தியில் இருக்கின்ற சுகவீனங்களை சுகப்படுத்தும், விசுவாசிக்கவும், ஜீவிக்கவும் நீர் எங்களுக்காக விட்டுச் சென்றுள்ள எல்லா சத்தியங்களுக்கும் அஸ்திபாரமாயிருக்கின்ற உம்முடைய பரிசுத்த வார்த்தையை நாங்கள் வாசிக்கையில் எங்களுக்கு உதவி செய்யும். 3 இங்கே கூடியிருக்கின்ற இந்த கூட்டத்தாருக்காக மட்டுமின்றி, உலகத்தை சுற்றியுள்ள யாவருக்காகவும் நாங்கள் ஜெபிக்கிறோம்; ஏனென்றால் அவருடைய வருகைக்காக வாஞ்சையுள்ள இருதயங்களோடும், ஆவலுள்ள கண்களோடும் நாங்கள் எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறோம். இன்றைக்கு நாங்கள் இருளிலும், குழப்பத்திலும் நிற்கிறோம், அதாவது எந்த நேரத்திலும், எந்த பைத்தியக்காரனாவது ஏதோ ஒன்றை வெடிக்கச் செய்யும்படியாய் ஒரு சிறு பொத்தானை திருப்ப அது முழு உலகத்தையும் பொடிப் பொடியாக செய்யக் கூடும். மிகப் பெரிய அதிகாரிகளால் நமக்கு கூறப்பட்டுள்ளபடியே, அது எப்பொழுதாவது மீண்டும் சம்பவிக்க நேர்ந்தால், யுத்தமானது ஒரு சில மணி நேரமே நடைபெறும். ஓ! அதன் காரணமாகவே இன்றைக்கு நாங்கள் மற்றொரு யுத்தத்தின் முனையில் நின்று கொண்டிருக்கிறோம். ஆகையினால் சபையானது அந்த மகத்தான மகிமையான உயிர்த்தெழுதலின் முனையில் நின்று கொண்டிருக்கிறது. ஏனென்றால் நாங்கள் கர்த்தரை ஆகாயத்தில் சந்திக்கும்படியாயும், அவரோடு என்றென்றைக்குமாய் இருக்கும்படியாயும் மரித்த பரிசுத்தவான்களோடு சேர்ந்து எடுத்துக் கொள்ளப்படுவோம். 4 கர்த்தாவே, நாங்கள் உம்மை ஆராதிக்கும்படியாய் வந்திருக்கிறோம். இன்றைக்கு எங்களை ஏற்றுக் கொள்ளும். வாசிக்கப்படுகின்ற உம்முடைய வார்த்தையையும், பாடப்படுகின்ற பாடல்களையும், சுவிசேஷத்தின் பிரசங்கத்தையும் ஆசீர்வதியும், தவறுக்காக வருந்துகின்றவர்களின் ஜெபங்களை ஏற்றுக் கொள்ளும். வியாதிக்கான ஜெபத்தைக் கேட்டு, உமக்கே மகிமையை எடுத்துக் கொள்ளுமாறு உம்முடைய குமாரனாகிய இயேசுவின் நாமத்தில் நாங்கள் அதை தாழ்மையாய் கேட்கிறோம். ஆமென். 5 இந்தக் காலையில் நாம் எங்கிருந்து நம்முடைய வேதவாக்கியங்களை வாசிக்க விருக்கிறோம் என்பதை குறித்துக் கொள்ளும்படியாய் அறிந்து கொள்ள நீங்கள் விரும்புகிறீர்கள். 6 இந்த மிக மகிமையான கர்த்தருடைய ஆராதனைக்காக வித்தியாசமான சபைகளிலிருந்தும், வித்தியாசமான நாடுகளிலிருந்தும், வித்தியாசமான தேசங்களிலிருந்தும் கூட, இந்தக் காலை இங்கே கூடாரத்தில், எங்களோடு ஆராதிக்கும்படியாய் இந்த அதிகாலையில் கூடி வந்திருக்கின்ற இந்த அருமையான ஜனக்கூட்டத்திற்கு அறையில் உட்காரும்படியான இருக்கைகள் எங்களிடத்தில் இல்லாததை அறிந்து நாங்கள் வருந்துகிறோம். 7 நீங்கள் சங்கீதப் புத்தகத்திற்கு, சங்கீதம்22-க்குத் திருப்பும்படியாய் நான் விரும்புகிறேன். சரியாகக் கூறினால் ஒரு ஈஸ்டர் ஆராதனையில் வாசிப்பதற்கு இது வழக்கத்திற்கு மாறான பகுதி என்பதை நான் அறிவேன், ஆனால் தேவன் வழக்கத்திற்கு மாறானவராயிருக்கிறார். 8 இப்பொழுது இந்த ஆராதனைக்குப் பிறகு, நீங்கள் உங்களுடைய காலையுண்டிக்காக நீங்கள் போகும்படியாக, ஏறக்குறைய ஒரு மணி நேரம் நாம் இடையில் நிறுத்தி வைப்போம். பின்னர் ஞாயிறு பள்ளி ஆராதனையானது 9.30 மணிக்குத் துவங்கும். பின்னர் உடனடியாக ஞாயிறு ஆராதனைக்குப் பிறகு, ஞானஸ்நான ஆராதனை இங்கே தண்ணீர் தொட்டியில் இருக்கும். அடுத்தபடியாக இந்த பிற்பகல், 6 மணிக்கு இன்றிரவிற்கான சுகமளிக்கும் ஆராதனைக்காக ஜெப அட்டைகள் விநியோகிக்கப்படும். நீங்கள் நேசிக்கின்ற யாராகிலும் வியாதியாயும், தேவையுள்ளவர்களாயுமிருந்தால், இன்றிரவு அவர்களை கொண்டு வரும்படியாய் ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். எப்படியாயினும் இந்தக் கடைசி நேரத்தில் நாங்கள் இருக்கக் கூடிய கொஞ்ச நேரமாய் இது இருக்கும்.நான் காலை 5 மணிக்கு, தொடர்ச்சியான கூட்டங்களுக்காக மேற்குக் கரையினூடாக லாஸ் ஏஞ்சலிஸ்சிற்கு போகிறேன். 9 இப்பொழுது சங்கீதம் 22-ஐ நாம் வாசிப்போம் என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்? எனக்கு உதவி செய்யாமலும், நான் கதறிச் சொல்லும் வார்த்தைகளைக் கேளாமலும் ஏன் தூரமாயிருக்கிறீர்? என் தேவனே, நான் பகலிலே கூப்பிடுகிறேன், உத்தரவுகொடீர்; இரவிலே கூப்பிடுகிறேன், எனக்கு அமைதலில்லை. இஸ்ரவேலின் துதிகளுக்குள் வாசமாயிருக்கிற தேவரீரே பரிசுத்தர். எங்கள் பிதாக்கள் உம்மிடத்தில் நம்பிக்கைவைத்தார்கள்; நம்பின அவர்களை நீர் விடுவித்தீர். உம்மை நோக்கிக் கூப்பிட்டுத் தப்பினார்கள்; உம்மை நம்பி வெட்கப்பட்டுப் போகாதிருந்தார்கள். நானோ ஒரு புழு, மனுஷனல்ல; மனுஷரால் நிந்திக்கப்பட்டும், ஜனங்களால் அவமதிக்கப்பட்டும் இருக்கிறேன். என்னைப் பார்க்கிறவர்களெல்லாரும் என்னைப் பரியாசம்பண்ணி, உதட்டைப் பிதுக்கி, தலையைத் துலுக்கி; கர்த்தர்மேல் நம்பிக்கையாயிருந்தானே, அவர் இவனை விடுவிக்கட்டும்; இவன் மேல் பிரியமாயிருக்கிறாரே, இப்பொழுது இவனை மீட்டுவிடட்டும் என்கிறார்கள். நீரே என்னைக் கர்ப்பத்திலிருந்து எடுத்தவர்; என் தாயின் முலைப்பாலை நான் உண்கையில் என்னை உம்முடைய பேரில் நம்பிக்கையாயிருக்கப்பண்ணினீர். கர்ப்பத்திலிருந்து வெளிப்பட்ட போதே உமது சார்பில் விழுந்தேன்; நான் என் தாயின் வயிற்றில் இருந்தது முதல் நீர் என் தேவனாயிருக்கிறீர். என்னை விட்டுத் தூரமாகாதேயும்; ஆபத்து கிட்டியிருக்கிறது, சகாயரும் இல்லை. அநேகம் காளைகள் என்னைச் சூழ்ந்திருக்கிறது; பாசான் தேசத்துப் பலத்த எருதுகள் என்னை வளைந்து கொண்டது. பீறிக் கெர்ச்சிக்கிற சிங்கத்தைப்போல், என்மேல் தங்கள் வாயைத் திறக்கிறார்கள். தண்ணீரைப்போல ஊற்றுண்டேன்; என் எலும்புகளெல்லாம் கட்டுவிட்டது, என் இருதயம் மெழுகு போலாகி, என் குடல்களின் நடுவே உருகிற்று. என் பெலன் ஓட்டைப்போல் காய்ந்தது; என் நாவு மேல்வாயோடே ஒட்டிக் கொண்டது; என்னை மரணத்தூளிலே போடுகிறீர். நாய்கள் என்னைச் சூழ்ந்திருக்கிறது; பொல்லாதவர்களின் கூட்டம் என்னை வளைந்துகொண்டது; என் கைகளையும் என் கால்களையும் உருவக் குத்தினார்கள். என் எலும்புகளையெல்லாம் நான் எண்ணலாம்; அவர்கள் என்னை நோக்கிப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். என் வஸ்திரங்களைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் உடையின் பேரில் சீட்டுப் போடுகிறார்கள். ஆனாலும் கர்த்தாவே, நீர் எனக்குத் தூரமாகாதேயும்; என் பெலனே, எனக்குச் சகாயம்பண்ணத் தீவிரித்துக்கொள்ளும். என் ஆத்துமாவைப் பட்டயத்திற்கும், எனக்கு அருமையானதை நாய்களின் துஷ்டத்தனத்திற்கும் தப்புவியும். என்னைச் சிங்கத்தின் வாயிலிருந்து இரட்சியும்; நான் காண்டாமிருகத்தின் கொம்புகளில் இருக்கும்போது எனக்குச் செவிகொடுத்தருளினீர். உம்முடைய நாமத்தை என் சகோதரருக்கு அறிவித்து, சபைநடுவில் உம்மைத் துதிப்பேன்.ஆம். கர்த்தருக்குப் பயப்படுகிறவர்களே, அவரைத் துதியுங்கள்; யாக்கோபின் சந்ததியாரே, நீங்கள் எல்லாரும் அவரைக் கனம்பண்ணுங்கள்; இஸ்ரவேலின் வம்சத்தாரே, நீங்கள் எல்லாரும் அவர்பேரில் பயபக்தியாயிருங்கள். உபத்திரவப்பட்டவனுடைய உபத்திரவத்தை அவர் அற்பமாயெண்ணாமலும் அருவருக்காமலும், தம்முடைய முகத்தை அவனுக்கு மறைக்காமலுமிருந்து, தம்மை நோக்கி அவன் கூப்பிடுகையில் அவனைக் கேட்டருளினார். மகா சபையிலே நான் உம்மைத் துதிப்பேன்; அவருக்குப் பயப்படுகிறவர்களுக்கு முன்பாக என் பொருத்தனைகளைச் செலுத்துவேன். சாந்தகுணமுள்ளவர்கள் புசித்துத் திருப்தியடைவார்கள்; கர்த்தரைத் தேடுகிறவர்கள் அவரைத் துதிப்பார்கள்; உங்கள் இருதயம் என்றென்றைக்கும் வாழும். பூமியின் எல்லைகளெல்லாம் நினைவுகூர்ந்து கர்த்தரிடத்தில் திரும்பும்; ஜாதிகளுடைய சந்ததிகளெல்லாம் உமது சமூகத்தில் தொழுதுகொள்ளும். ராஜ்யம் கர்த்தருடையது; அவர் ஜாதிகளை ஆளுகிறவர். பூமியின் செல்வவான்கள் யாவரும் புசித்துப் பணிந்துகொள்வார்கள்; புழுதியில் இறங்குகிறவர்கள் யாவரும் அவருக்கு முன்பாக வணங்குவார்கள். ஒருவனும் தன் ஆத்துமா அழியாதபடி அதைக் காக்கக்கூடாதே. ஒரு சந்ததி அவரைச் சேவிக்கும்; தலைமுறை தலைமுறையாக அது ஆண்டவருடைய சந்ததி என்னப்படும். அவர்கள் வந்து: அவரே இவைகளைச் செய்தார் என்று பிறக்கப்போகிற ஜனங்களுக்கு அவருடைய நீதியை அறிவிப்பார்கள். 10 வாசித்த அவருடைய வார்த்தைக்காக கர்த்தர் அவருடைய ஆசீர்வாதங்களை கூட்டுவாராக. நான் இந்தக் காலை இந்த சிறப்பு நிகழ்ச்சிக்காக ஐந்து வார்த்தைகளை எடுத்து, அந்த ஐந்து வார்த்தைகளை சுற்றியே என் இருதயத்தில் உள்ளதை இந்தக் காலை ஆராதனைக்காரர்களாகிய உங்களுக்கு வெளிப்படுத்திக் கூறும்படியாய் முயற்சிக்க விரும்புகிறேன். நான், “ஜீவிக்கும்போது, மரிக்கும்போது, அடக்கம் பண்ணப்பட்டபோது, உயிர்த்தெழுந்தபோது, வரும்போது” என்ற இந்த ஐந்து வார்த்தைகளை விரும்புகிறேன். 11 நான் சொல்லவேண்டுமென்று விரும்புவதைக் குறித்து, புலவன் இந்தப் பாடலை எழுதின போது, அவன் அந்தப் பாடலில் அதை நன்றாக வெளிப்படுத்திக் கூறியுள்ளான் என்று நான் நினைக்கிறேன். ஜீவிக்கும் போது, அவர் என்னை நேசித்தார். மரிக்கும் போது, அவர் என்னை இரட்சித்தார். அடக்கம் பண்ணப்பட்ட போது, அவர் என் பாவங்களை தொலைதூரம் கொண்டு போய் விட்டார். உயிர்த்தெழுந்த போது, அவர் இலவசமாய் என்றென்றைக்குமாய் நீதிமானாக்கினார். என்றோ ஒரு நாள் அவர் வருகிறார், ஓ, மகிமையான நாள்! 12 அவரைப் போன்று ஜீவித்த ஒரு ஜீவியம் ஒரு போதும் இருந்ததேயில்லை; ஏனென்றால் அவர் பிறந்தபோது அவர் மாம்சத்தில் வெளிப்பட்ட தேவனாயிருந்தார். அவர் பிதாவாகிய தேவன் என்னவாயிருக்கிறார் என்பதின் வெளிப்படுத்தலாயிருந்தார். பிதாவாகிய தேவன் அன்பாயிருக்கிறபடியால், அவ்வண்ணமே இயேசுவானவர் அன்பின் முழு வெளிப்படுத்தலாய் இருந்தார். அவருடைய சிறிய குழந்தைக் கரங்கள் அவருடைய தாயாரின் அழகான கன்னங்களை தட்டிக் கொடுத்த அந்த நேரத்திலிருந்தே அவர் அன்பாயிருந்தார். அவர் அன்பாயிருந்தார். 13 அங்கேதான் அநேகர் அவர் அன்பாயிருந்தார் என்பதை அடையாளங் கண்டுகொள்ள தவறிக்கொண்டிருக்கின்றனர் என்று இன்று நான் நினைக்கிறேன். “தேவன் அன்பாகவே இருக்கிறார், அன்பாயிருக்கிறவர்கள் தேவனால் பிறந்திருக்கின்றனர்”. 14 “தேவன், தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப் போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி இவ்வளவாய் அன்புக்குரியதாயில்லாதிருக்கிற உலகத்தில் அன்பு கூர்ந்தார்”. 15 அவர் பூமியின் மேலிருந்த போது, அவரே எப்போதும் ஜீவித்தவர்களில் மிகுந்த அன்புள்ள சிருஷ்டியாய் இருந்தார் என்று எதிர்வாதத்திற்கு இடமில்லாத அளவிற்கு பல்வேறு வழிகளில் அவர் தம்முடைய அன்பை வெளிப்படுத்திக் காட்டினார். இங்கே அவருடைய ஜீவியத்தில், அவர் தேவனை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார் என்று நான் நினைக்கிறேன். தேவனை ஜனங்களுக்கு வெளிப்படுத்திக் காட்டக் கூடிய ஒரே வழி அன்பின் மூலமாகவே இருக்கிறது. 16 ஒருவேளை அவருடைய நாட்களில் மிகவும் இழிவாயிருந்த ஒரு ஸ்தீரியைக் குறித்து அவர் சிக்கவைக்கப்படலாமென்றிருந்தபோது, அவர் அதை நன்றாக தீர்த்து வைத்தார். அவர்கள் அவளை குற்றவாளியாகப் பிடித்தனர், அவள் விபச்சாரத்தில் பிடிக்கப்பட்டபோது, தப்பிக்க வழியேயில்லாதிருந்தது. அவர்கள் அவளை அவருக்கு முன்பாக இழுத்துக் கொண்டு வந்து, “நீர் இவளுக்கு என்ன செய்யவேண்டுமென்று சொல்கிறீர்?” என்றனர். 17 அவர் அவளண்டை திரும்பி, “நான் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை, நீ போ, இனி பாவஞ் செய்யாதே” என்றார். அவளைத் தூக்கி வீதியிலே எறிய, ஒரு கூட்ட ஓநாய்கள் அவள் மேல் விழுந்து இழுத்து, அவளை கல்லெறிந்து அவளுடைய ஜீவனை எடுப்பதற்கு பதிலாக அவருடைய மென்மையான, தயவான, அன்பான இருதயம் அவளிருந்த பாவத்திற்குள்ளாக குனிந்து போய், “நான் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை. நீ போ, இனி பாவஞ் செய்யாதே” என்றார். 18 அவர் லாசருவின் கல்லறைக்கு போகும் வழியிலே தேவன் மானிடவர்க்கத்திற்கு என்னவாயிருக்கிறார் என்பதை அவர் வெளிப்படுத்திக் காட்டின மற்றொரு மகத்தான நேரமாயிருந்தது என்று நான் நினைக்கிறேன். கீழ்த்தரமாக செய்யக்கூடிய பாவத்தை மன்னித்து, அவருடைய மன்னிக்கும் அன்பின் மூலமாக குற்றத்தை எடுத்துப் போட்டு அவர்களை குற்றமற்றவர்களாக்குகின்ற தேவனாய் மட்டும் அவரில்லை. ஆனால் மரணம் நம்மை மௌனத்தில் வைத்திருக்கின்ற பிறகும், அவர் இன்னமும் நம்மைக் குறித்து அக்கறை கொண்டவராயிருக்கிறார். ஒரு அன்பான நபருடைய ஜீவனை மரணமானது மூடிப் போட்டிருந்த வீட்டிற்கு அவர் வந்த போது, அவர் மார்த்தாளோடும், மரியாளோடும் வழியிலே அதை நன்றாக வெளிப்படுத்தினார் என்று நான் நினைக்கிறேன். அவர் கல்லறைக்கு போய்க் கொண்டிருந்த வழியிலே தேவனாயிருந்தும், அவர் அவனை மரித்தோரிலிருந்து எழுப்புவார் என்று அறிந்திருந்தும், அவனை கல்லறையிலிருந்து எழுப்பத்தக்க வல்லமை அவருடைய வார்த்தைகளிலே இருக்கிறதென்று அவருக்கு சொல்லப்பட்டிருந்ததை அறிந்திருந்தும், மார்த்தாளும் மரியாளும் லாசருவை நேசித்தவர்களும் அழுகிறதை அவர் கண்ட போது, அவர் கண்ணீர் விட்டார் என்று வேதம் கூறியுள்ளது. அது என்ன? அவருடைய மகத்தான அன்பின் இருதயம்! அவர் அந்த மனிதனும் அவருடைய—அவருடைய நண்பர்களும் கலங்கி துயரத்திற்குள்ளிருந்ததை அவர் கண்ட போது, அவர்களோடே அவர் கலங்கி துயரமடைந்தார். 19 இருதயம் நொருங்குண்டவர்கள் மத்தியில் அவரைக் கண்டு பிடிக்க முடியும் என்று அறிவதினால் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். அவர் நம்முடைய துயரங்களில் நம்மை விட்டுப் போகிறவரல்ல. எல்லோரும் கைவிட்டிருந்த போதும், பூமிக்குரிய நம்பிக்கைகள் அதனுடைய முடிவிற்கு வந்தடைந்திருந்த போதும் அவர் நமக்கு அருகில் நிற்கிறார். அவர் இன்னமும் தேவனாய் இருக்கிறார். அவர் நம்மை நேசிக்கிறார். அவர் தேவனுடைய வெளிப்படுத்துதலாய் இருக்கிறார். 20 ஓ, அவருடைய ஜனங்கள் அதிகமாய் அவருடைய ஆவியினால் அபிஷேகிக்கப்பட்டு, துன்பங்களிலும், தொல்லைகளிலும் நாம் ஒருவரிடத்திலொருவர் போய் அவருடைய பரிவிரக்க வெளிப்படுத்துதலை அவருடைய ஆவியினால் பிறப்பிக்கப்பட்டிருக்கின்ற நம்முடைய இருதயங்களிலிருந்து அது ஊற்றிக் கொண்டிருக்கும் வன்ணமாய் கொடுத்து, ஜீவிக்கின்ற தேவனின் அன்பை சபையில் பிரதிபலிக்க அவர் எதிர்பார்க்கிறார் என்று எப்படியாய் நான் விரும்புகிறேன். அது அவர் கூறினதையோ அல்லது புலவன் கூறினதையோ நன்றாக வெளிப்படுத்தியுள்ளது. ஜீவிக்கும்போது, அவர் என்னை நேசித்தார். 21 தேவன் இயேசு கிறிஸ்துவில் தம்மை பிரதிநிதித்துவமாய்க் காட்டின விதத்தில் அவர் முழு மானிட வர்க்கத்திற்கும் என்ன செய்தார் என்பதை அவர் காட்டினார். அவர் நேசிக்க முடியாதிருந்தவர்களை நேசிக்க, மன்னிக்கும்படியான தம்முடைய கருத்தினை மானிட வர்க்கத்திற்கு வெளிப்படுத்திக் காட்டினார். இந்த உயிர்த்தெழுந்த காலையில் நாம் எவ்வளவு குறைவுள்ளவர்களாய் இருக்கிறோம் என்று நான் வியப்படைகிறேன். நம்மை நேசிக்கின்றவர்களை நாம் நேசிக்க முடியும். ஆனால் அவரை நேசிக்காதவர்களை அவர் நேசித்தார். 22 உலகத்தை எப்போதும் அன்பு தாக்கினதிலேயே மகத்தான முதல் பிரதிநிதித்துவமாயிருந்தவர் அவரே; பூமியின் மேல் ஜீவித்தவர்களால், அவர் நேசித்தவர்களாலே நிந்திக்கப்பட்டார். அவரைப் போல எந்த மனிதனாலும் எப்போதும் நேசிக்க முடியாது; அவரைப் போல எந்த மனிதனும் எப்போதுமே வெறுக்கப்பட்டதுமில்லை. அவர்கள் அவரை வெறுத்தார்கள். அவரை நிந்தித்தார்கள், அவரை புறக்கணித்தார்கள், ஆனால் அது அவருடைய அன்பை நிறுத்தவில்லை. அவர் நன்மையான காரியங்களையேயல்லாமல் வேறொன்றையும் செய்யாமல், குற்றத்தை மன்னித்து, வியாதியஸ்தரை சுகப்படுத்தி, சரியாக நன்மையாயிருந்த காரியங்களையே செய்தவராய் ஜீவித்த பிறகும், கடைசியாக அவர் சிலுவையின் மேல் தொங்கிக் கொண்டிருந்தார். அவர் இறுதி மூச்சில் சிலுவையின் மேல் இழிவாகவும், அருகில் நின்றிருந்தவர்களால் பரியாசமாய் துப்பப்பட்டு தொங்கிக் கொண்டிருந்த போது, ஒரு அன்பு நிறைந்த இருதயத்தோடு அவருடைய புனிதமான முகத்திலிருந்து அவர், “பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே”என்று கதறினார். 23 அவரால் புரிந்து கொள்ள முடிந்தது. தேவனாய் இருக்கின்ற படியால், அவர் புரிந்து கொள்கிறார். அதனால்தான் நாம் நேசிக்கக் கூடாதவர்களாய் இருந்தபோது அவரால் நம்மை நேசிக்க முடிந்தது, ஏனென்றால் அவர் தேவனாய் இருக்கிறார். அவர் புரிந்து கொள்ளுகிறார். “ஜீவிக்கும் போது, அவர் என்னை நேசித்தார்”. அதைப் போன்றதொரு ஜீவியமே ஒருபோதும் ஜீவிக்கப்பட்டதில்லை, ஏனென்றால் அது அன்பில் சுற்றப்பட்டிருந்தது. மரிக்கும் போது, அவர் என்னை இரட்சித்தார். 24 ஏதேன் தோட்டத்தில் யேகோவா தேவனுக்கு ஒரு மரணம் தேவைப்பட்டது…பாவத்தின் தண்டனை மரணமாய் இருக்கிறது. அங்கே எந்த மாற்றங்களும் இருந்திருக்க முடியாது. வேறெந்த விதத்திலும் அதை சரிப்படுத்த வழியேயில்லை. காரணம் தேவன் எல்லாவற்றிற்கும் மேம்பட்டவராயிருக்கிறார். அவர் எல்லையற்றவராயிருக்கிறார், எல்லா வானங்களுக்கும் பூமிக்கும் நியாயாதிபதியாய் இருக்கிறார். பாவத்தின் தண்டனை மரணம், இன்னொருவருக்காக இந்த தண்டனையை செலுத்தக் கூடியவர் ஒருவருமேயில்லை. ஏனென்றால் ஒவ்வொரு மனிதனும், அவன் மற்றொரு மனிதனுக்காக மரிக்கக் கூடியவனாய் இருந்தாலும், அவன் துவங்கும் போதே குற்றவாளியாயிருக்கிறான். நம்மில் எவருமே மற்றவர்களுக்கு உதவி செய்ய முடியாமல் இருந்தோம், ஏனென்றால் நாம் குற்றவாளிகளாய் இருந்தோம். “நாம் பாவத்தில் பிறந்து, அக்கிரமத்தில் உருவாக்கப்பட்டு, பொய்களை பேசுகின்றவர்களாய் உலகத்திற்கு வந்தோம்”. நம்பிக்கையின் ஒரு கதிரே எங்கும் இல்லாதிருந்தது. நாம் தேவனால் மரணத்திற்கென்றே ஆக்கினைக்குள்ளாக தீர்க்கப்பட்டிருந்தோம். பூமியின் மேல் ஜீவித்த ஒவ்வொரு சிருஷ்டியும் இந்த ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டேயிருந்தது. நீதிமான்கள் எழும்பி மகத்தான காரியங்களை செய்யக் கூடும், ஆனால் அவன் துவங்கும் போதே ஒரு பாவியாயிருக்கிறான். 25 அது செலுத்தப்படுவதற்கான ஒரே ஒரு வழியாயிருந்தது, அது தேவனுடைய மரணமாய் இருந்தது. எனவே தேவன் ஒரு ஆவியாய் இருந்துக் கொண்டு மரிக்க முடியாது, ஆனால் அவர் ஒரு மாம்ச சரீரத்தில் கீழே இறங்கி வந்து, ஒரு அன்பின் ஜீவியத்தில் தம்மையே வெளிப்படுத்திக் காட்டினார்; அவருக்கிருந்த நன்மையனைத்தும் எடுத்துப் போடும்படியான, அவர் குற்றாவாளிகளின் குற்றத்தை நீக்கிப் போடும்படியான, பிரதானமான பலியாய் இருந்தபடியால் அதை மனப்பூர்வமாய் கொடுத்தார். நாம் எல்லோரும் பாவிகளாயிருந்தபடியினால், உலகத்தில் நாம் இரட்சிக்கப்படுவதற்கான வழியே இல்லாதிருந்தது, அவர் பூமியின் மேல் காணப்படும்படியாக மட்டும் வரவில்லை, ஆனால் அவர் ஒரு பலியாக மரிக்கும்படியாக வந்தார். 26 ஆபேல் காயீனைக் காட்டிலும் ஒரு மேன்மையான பலியை தேவனுக்கு செலுத்தின போது அதை வெளிப்படுத்தினான்; அவன் சிறு ஆட்டுக்குட்டியை ஒரு திராட்சைக் கொடியின் துண்டினால் அதனுடைய கழுத்தை சுற்றிக் கட்டி ஒரு கற்பாறையினிடத்திற்கு கொண்டு வந்தான். அந்த சிறு குட்டி பாறையின் மேல் கிடத்தப்பட்டு, அதனுடைய சிறு முகவாய்க்கட்டை பின்னாக இழுக்கப்பட்டு, ஒரு—ஒரு கற்பாறையினால் அதனுடைய சிறு தொண்டை துண்டிக்கப்பட்டது; அது கதறிக்கொண்டே மரிக்க, இரத்தமானது பீறிட்டு வெளியே வர, அதனுடைய சிறிய வெண்மையான ரோமங்கள் இரத்தத்தால் குளிப்பாட்டப்பட்டன. ஆபேல் கல்வாரியை அங்கே வெளிப்படுத்திக் காட்டினான். 27 உலகத் தோற்ற முதல் அடிக்கப்பட்ட தேவ ஆட்டுக்குட்டி குற்றவாளிகளான பாவிகளின் ஸ்தானத்தை எடுக்கும்படியாக வந்தபோது, நொறுக்கப்பட்டு, நசுக்கப்பட்டு, பரியாசம் பண்ணப்பட்டு, கேலி செய்யப்பட்டு, தேவனேயன்றி வெறெந்த சிருஷ்டியும் மரிக்க முடியாத ஒரு மரணத்தில் மரித்தார், அவருடைய இரத்தந்தோய்ந்த ஜடைமுடிகள் அவருடைய தோள்பட்டைகளிலிருந்து தொங்கிக் கொண்டு, தரையில் சொட்டிக் கொண்டிருந்தது. ஒரு பாவ ஜீவியத்திலிருந்து மனிதனை மீட்கும்படியாய் மரிக்க வேண்டியிருந்தபோது, பாவமானது என்ன ஒரு பயங்கரமான காரியமாய் இருக்கிறது என்பதை வெளிப்படுத்திக் காட்டினது. எதுவுமே அதைப் போன்று மரிக்க முடியாது. எதுவுமே அந்த மரணத்தை தாங்கிக் கொள்ள முடியாது. “அவர்கள் அவருடைய விலாவில் குத்தினபோது அங்கே இரத்தமும் தண்ணீரும் புறப்பட்டு வந்தது” என்று கூறப்பட்டுள்ளது. 28 கொஞ்சம் காலத்திற்கு முன்னர், நான் இதைக் குறித்து ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். “அது சம்பவித்திருக்க ஒரே ஒரு வழி தான் உண்டு. அது ரோம ஈட்டியின் காரணமாக அவர் மரித்தார் என்பதினாலல்ல. அது இரத்தமானது வெளியேறினபடியினால் அவர் மரித்தார் என்பதினாலல்ல, ஏனென்றால் அங்கே அவருடைய சரீரத்தில் முன்பிருந்தது போலவே இரத்தம் இருந்தது. அவர் எதினால் மரித்தார் என்றால், ரோம ஈட்டியின் நிமித்தமாயல்ல அல்லது அவருடைய கைகளில் ஆணிகள் கடாவப்பட்டதினால்ல, அல்லது அவருடைய சிரசின் மேல் முட்கீரிடம் சூட்டப்பட்டதினாலல்ல. ஆனால் காரணம் என்னவென்றால்…அவர் துக்கத்தினால் மரித்தார், ஏனென்றால் அவர் தமக்கு சொந்தமானவர்களிடத்தில் வந்தார். அவருக்கு சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் ஒரு நொறுங்குண்ட இருதயமுடையவராய் மரித்தார். அவர் மீட்கும்படியாய் மரிக்க வேண்டியிருந்த போது அதே சிருஷ்டிகளே அவருடைய முகத்தில் துப்பியிருந்ததை அவர் அறிந்திருந்தார், அவர் புறக்கணிக்கப்பட்ட மனிதனாய் இருந்தார்”என்று கூறினதே ஒரு விஞ்ஞானியாகும். 29 இது சம்பவிப்பதற்கு எண்னூறு வருடங்களுக்கு முன்பே தாவீது, “என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்று அவர் கல்வாரியில் கதறின அதே சத்தத்தில் கதறினான். 30 என்ன ஒரு பயங்கரமான காரியத்தை அந்தப் பாவம் செய்கிறது, அது மனிதனை தேவனிடத்திலிருந்து பிரிக்கிறதே! அவர் நம்முடைய பாவங்களுக்காக செலுத்தப்பட வேண்டியிருந்த பாவ நிவாரண பலியாக இருந்தார். அவர் தேவனுடைய சமூகத்தினின்று பிரிக்கப்பட்டார். பாவம் அவரை பிரித்திருக்கிறது. தேவன் நம்முடைய பாவங்களை அவர் மேல் சுமத்தினதினால், அவர் தேவனிடத்திலிருந்து பிரிக்கப்பட்டு, “ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்று அதன் காரணமாகவே அவர் கதறினார். அவர் கைவிடப்பட்டதின் நிமித்தமாகவே, இந்த ஸ்தானத்தை எடுத்து தம்முடைய ஜனங்களைக் கண்டு, அவர்களுக்கு ஜீவனை கொடுக்கும்படியான அவர்களுடைய இரட்சகராக இருக்க அவர் வரவேண்டியதாய் இருந்தும், அவர்கள் அவரை புறக்கணித்திருந்தனர். அவர் அவ்வளவு இருதயம் நொறுங்குண்டவராக்கப்பட்டு, தண்ணீரும் இரத்தமும் அவருடைய சரீரத்தின் இரசாயனங்களும் பிரிக்கப்படும் வரை அது அவரை மிகவும் துக்கப்படுத்தியது. 31 மனிதனோ அது என்னவாயிருந்தது என்பதை ஒரு போதும் அறிந்து கொள்ளவேமாட்டான். அந்தக் காரணத்தினால் தான் அதைப் போன்று எவரொருவரும் எப்போதுமே மரிக்க முடியாது. நீங்கள் எவ்வளவு தான் சித்திரவதை செய்யப்பட்டாலும், அவர்கள் எவ்வளவுதான் உங்களுடைய பாதங்களை கழுமரத்தில் கட்டினாலும் அல்லது உங்களை அங்குலம் அங்குலமாக அறுத்தாலும், அல்லது உங்களை அங்குலம் அங்குலமாக சுட்டெரித்தாலும் எனக்குக் கவலையில்லை. நீங்கள் அந்தவிதமான மரணத்தினால் மரிக்க முடியாது, ஏனென்றால் உங்களுடைய தோற்றம் அந்தவிதமாக உண்டாக்கப்படவில்லை. அவர் தேவனாயிருக்க வேண்டியிருந்தது. அவர் மனிதனைக் காட்டிலும் மேலானவராய் இருக்க வேண்டியிருந்தது. சிந்தித்துப் பாருங்கள், தேவன் மரித்தார். உங்களுக்கு சம்பவிக்க முடியாத ஒரு இரசாயன எதிர்விளைவு அவருடைய சரீரத்தில் சம்பவிக்குமளவிற்கு உலகத்திற்கான அத்தகைய துக்கத்தோடு கூடிய ஒரு நொறுங்குண்ட இருதயமுடையவராய் அவர் மரித்தார். நீங்கள் அதைப் போன்று துன்புற முடியாது. நீங்கள் அந்த விதமான ஒரு துக்கமுடையவராயிருப்பதற்கான வழியேயில்லை. எனவே அதைச் செய்யக்கூடிய ஓரே ஒருவர் இருக்கிறபடியால், அவர் அதைச் செய்தார். 32 அன்பையும் நன்மை செய்வதையும் தவிர வேறொன்றையும் அறியாதிருந்த அந்த விலையேறப்பெற்ற ஜீவன் அங்கே வானங்களுக்கும் பூமிக்கும் இடையே தொங்கிக் கொண்டிருக்க உயர்த்தப்பட்டு, நிர்வாணமாக உரியப்பட்டு, கலக்கமடைந்தவராய் தொங்கிக் கொண்டிருந்தார்…நீங்கள் நிவாணமாய் உரியப்பட்டால் எப்படியிருப்பீர்கள் என்று சிந்தித்துப் பாருங்கள்; தேவன் என்ன குழப்பத்தோடு அங்கே தொங்கிக் கொண்டிருந்திருப்பார் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளமாட்டீர்கள். அவர்கள் அவரைச் சுற்றி ஏதோ சுற்றியிருந்தது போன்று ஒரு சிறு வஸ்திரம் அவருடைய சரீரத்தில் இருக்கிறது என்று நான் அறிவேன்; ஆனால் அவர்கள் அதை ஒருபோதும் செய்யவில்லை. அது வெறுமனே சிலுவையின் மேல் சுற்றப்பட்டிருக்கிறது. அதாவது ஓவியன் அதை அங்கே வரைந்தான். அவர்கள் அவரிடத்திலிருந்து அவருடைய வஸ்திரங்களை உரிந்துக் கொண்டனர். அவர் ஒரு மேலங்கியை அணிந்திருந்தார். அவர்கள் அவரிடமிருந்து அதனைக் கிழித்து அதற்காக சீட்டுப் போட்டனர். அவர் மிகுதியாக கலவரப்பட்டார். தேவனாயிருக்கின்றபடியினால் பாவிகள் அவர் முகத்தின் மேல் துப்பினபோது பொறுத்துக்கொள்ள வேண்டியதாயிருந்தது. தன்னடக்கத்தின் ஆழமாய் இருக்கின்றபடியால் நிர்வாணமாக உரியப்பட்டு, பொது ஜனங்களுக்கு முன்பாக மரிக்க வேண்டியதாயிருந்தது. அது தண்ணீரையும், இரத்தத்தையும் பிரிக்குமளவிற்கு அது அத்தகைய விளைவை அவர்மேல் கொண்டுவந்தது. புலவன் அதைக் கூறினபோது நன்றாய் வெளிப்படுத்திக் காண்பித்தான் என்று நான் நினைப்பதில்…ஆச்சரியமேயில்லை: பிளந்த கன்மலைகளுக்கும், இருண்ட வானங்களுக்கு மத்தியில் என் இரட்சகர் தமது தலையை சாய்த்து மரித்தார், ஆனால் திறக்கப்பட்ட திரையானது பரலோகத்தின் சந்தோஷங்களுக்கும் முடிவற்ற நாளுக்கும் வழியை வெளிப்படுத்தினது. 33 நிச்சயமாகவே, அவர் அதை செய்ய வேண்டியதாயிருந்தது. அந்தத் திரையானது தேவனுக்கும் மனிதனுக்குமிடையே தொங்கினது. அந்த திறக்கப்பட்ட திரையானது பரலோகத்தின் சந்தோஷங்களுக்கும் முடிவற்ற நாளுக்குமான வழியை வெளிப்படுத்தினது. கல்வாரி ஏதோ ஒன்றைக் குறித்துக் காட்டுகிறது, நாம் வெளிப்படுத்திக் காட்ட முடிந்ததைக் காட்டினாலும் மேலாக எண்ணங்கொள்ளச் செய்கிறது. நிச்சயமாக. ஜீவிக்கும் போது, அவர் என்னை நேசித்தார், மரிக்கும் போது, அவர் என்னை இரட்சித்தார். அடக்கம் பண்ணப்பட்ட போது, அவர் என் பாவங்களை தொலைதூரம் கொண்டு போய் விட்டார். 34 இப்பொழுது அது ஆக்கினைக்குட்பட்டிருக்கிறது. இனி பாவத்திற்கு பிடிப்பேயில்லை. அவர் கல்வாரியில், “முடிந்தது” என்று கூக்குரலிட்ட போது, பாவம் மரித்துப் போயிற்றே! இப்பொழுது அது மரித்து விட்டது. அதனோடு அது முடிக்கப்பட்டாயிற்று. அது வல்லமையற்றதாய் இருக்கிறது. அது ஜீவனற்றிருக்கிறது. ஜனங்களே அதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள். மானிட வர்க்கத்திற்கு சத்துருவான அந்தப்பாவம் மரித்து, ஜீவனற்றதாய் இருக்கிறது, இனி அது பயனற்றதாயுள்ளது. அதனால் முடியாது. சூரியன் காட்சியில் வராமல் தடுக்கப்பட்டு, நட்சத்திரங்கள் பிரகாசிக்காமல், பூமியானது இருண்டு போனதில் வியப்பு ஒன்றுமில்லை, அவைகள் அனைத்துமே மீட்கப்பட்டாயிற்று. 35 இப்பொழுது அது மரித்திருக்கிறது, அது அடக்கப் பண்ணப்பட்டிருக்கிறது, அது ஜீவனற்றதாயிருக்கிறது. அதில் அதற்கு இனிமேல் ஜீவனே இல்லை, அப்படியானல் அது அடக்கப்பண்ணப்பட வேண்டும். அடக்கம் பண்ணப்பட்டது என்ன? தேவனுடைய சரீரம் அடக்கம் பண்ணப்பட்டது, ஏனென்றால் அது பாவநிவாரண பலியாய் இருந்தது. அது தகனிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியாயிருந்தது. அது அக்கிரமத்தின் அக்கினிகளால் தகனிக்கப்பட்டது. அந்த பாவமறிந்திராத பாவமற்ற ஆடு அநீதி அறியாதிருந்தது; அவருடைய ஜீவன் கொடுக்கப்பட்டு, அங்கே பாவநிவாரண பலியாக தொங்கினது. “அடக்கம் பண்ணப்பட்ட போது, அவர் என் பாவங்களை தொலைதூரம் கொண்டு போய் விட்டார்.” அவர் அடக்கம் பண்ணப்பட வேண்டும். அந்த சரீரம் பாவ நிவாரண பலியாக அடக்கம் பண்ணப்பட வேண்டும். 36 அந்தக் காரணத்தினால் தான் அநேகர் கொஞ்சம் கழித்து ஒருவர் பின் ஒருவராக இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பன்ணப்படும்படியாக இந்த நீர்த்தொட்டியண்டைக்கு நடந்து வருவார்கள். ஏன்? ஏதோ ஒன்று சம்பவித்திருக்கிறது. அவர், “முடிந்து விட்டது” என்று கூக்குரலிட்ட போது, அந்த சரீரத்தை விட்டு ஆவியானது வெளியே வந்து நம்முடைய சரீரங்களில் உள்ள பாவத்தை ஆக்கினைக்குள்ளாக தீர்த்தது. நாம் இனி அது ஒரு போதும் நினைவு கூரப்படகூடாதபடிக்கு அதை அடக்கம் பண்ண வேண்டும். அது அப்படி இருக்கின்றபடியால் நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன். 37 எந்தக் காரியமும் அடக்கம் பண்ணப்படும் போது அது மறைக்கப்படுகிறது, அது பார்வைக்கு புறம்பாக இருக்கிறது. “அடக்கம் பண்ணப்படும் போது, அவர் என் பாவங்களை தொலைதூரம் கொண்டு சென்றார்”. தேவன் இனி ஒரு போதும் நம்முடைய பாவங்களை காணமுடியாது, ஏனென்றால் அவைகள் அடக்கம் பண்ணப்பட்டிருக்கின்றன. அவைகள் எங்கே அடக்கம் பண்ணப்பட்டிருக்கின்றன? மறதியின் கடலிலே, மறதியின் கடலைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள்! தேவன் இனி ஒரு போதும் அவைகளை நினைவு கூரமுடியாது, ஏனென்றால் அவைகள் மரித்து அடக்கம் பண்ணப்பட்டிருக்கின்றன. அது இனி ஒரு போதும் நினைவுகூரப்படக் கூட முடியாது. அவைகள் தேவனுடைய நினைவிற்கு புறம்பாயிருக்கின்றன. 38 அவர் இந்த “அடக்கத்திலும்” கூட இருந்தார், அவர் பழைய ஏற்பாட்டில் பிரதிநிதித்துவம் பெற்றிருந்தார். அவர்கள் இரண்டு வைத்திருந்தனர்…அவர்களுக்கு பரிசுத்த ஸ்தலத்தை சுத்திகரிக்க ஒரு பாவநிவாரண பலியிருந்தது. அந்த பாவநிவாரண பலியில் அவர்கள் இரண்டு வெள்ளாடுகளைக் கொண்டு வந்தபோது ஒரு வெள்ளாடு கொல்லப்பட்டது; மரித்த வெள்ளாட்டின் மீது சுமத்தப்பட்டிருந்த பாவங்கள் இந்த உயிராயுள்ள வெள்ளாட்டின் மேல், இன்னொரு வெள்ளாட்டின் மீது சுமத்தப்பட்டன. 39 நினைவிருக்கட்டும், இயேசு ஒரு செம்மறியாடாய் இருந்தார். அவர் ஒரு செம்மறியாட்டுக் குட்டியாய் இருந்தார், ஆனால் இந்தக் காரியத்தில் அவர் ஒரு வெள்ளாடானார், அவர் நீதியுள்ளவராயிருந்தார். ஏனென்றால் அவர் தேவனாய், செம்மறியாடாய் இருந்தார். ஆனால் அவர் உங்களுக்காகவும், எனக்காகவும் பாவநிவாரண பலியாகும்படிக்கு அவர் ஒரு வெள்ளாடாய் வந்தார்; ஒரு செம்மறியாட்டிலிருந்து வெள்ளாடானார். 40 இயேசு இரண்டு மிருகங்களிலும், இரண்டு வெள்ளாடுகளாக சுட்டிக் காட்டப்பட்டார். ஏனென்றால், ஒன்று, அவர் மரித்தார், அவர் பாவ நிவிர்த்திக்காக மரித்தார்; இரண்டாவது, பாவ நிவிர்த்தியிலிருந்த பாவங்கள் போக்காட்டின் மேல் போடப்பட்டு, அந்தப் போக்காடு ஜனங்களுடைய பாவங்களை எடுத்துக் கொண்டு, ஜனங்களுடைய பாவங்களை சுமக்கும்படியாக தூர வனாந்திரத்திற்குள் சென்றது. அது என்ன? அது நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் மரணமும் அடக்கமுமாயிருந்தது. மரிக்கும் போது… “ஜீவிக்கும் போது, அவர் என்னை நேசித்தார். மரிக்கும் போது, அவர் என்னை இரட்சித்தார், அடக்கம் பண்ணப்பட்டபோது அவர் என் பாவங்களை தொலைதூரம் கொண்டு போய் விட்டார்”. அவர் ஜனங்களுடைய பாவங்களை தம்மேலேயே எடுத்துக் கொண்டு நேராக அவைகளை சுமந்து பாதாளத்தின் தாழ்விடத்திற்கு கொண்டு சென்றார். அவர் பாவநிவாரண பலியாய் இருந்தார். அவர் ஜனங்களின் பாவங்களை உடையவராயிருந்தார். அவர் அவர்களுக்காக மரித்தார். அவர் மீதும்கூட பாவங்கள் சுமத்தப்பட்டன, தேவன் இனி ஒரு போதும் அவைகளைக் காண முடியாதபடிக்கு, அவர் நம்முடைய பாவங்களை தொலைதூரம் கொண்டு சென்றார். அதைக் குறித்து சிந்தியுங்கள்! ஓ! சபையானது “அப்படிப்பட்ட ஒரு இரட்சகருக்காக அல்லேலூயா”! என்று சத்தமிட முடியும். 41 நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டது மட்டுமின்றி அவைகள் இனி ஒரு போதும் நினைவு கூரப்படக் கூடாதபடிக்கு மறதியின் கடலில் அடக்கம் பண்ணப்பட்டிருக்கின்றன. “அடக்கம் பண்ணப்பட்ட போது, அவர் நம்முடைய பாவங்களை தொலைதூரம் கொண்டு போய் விட்டார்”. அவைகள் இனி ஒரு போதும் நினைவு கூரப்பட முடியாது, ஏனென்றால் அவைகள் போய்விட்டன. அவைகள் தேவனுடைய கண்களுக்கு புறம்பாக இருக்கின்றன. அவைகள் முடமாக்கப்பட்டன. அவைகள் ரத்து செய்யப்பட்டு விட்டன. அவைகள் புறம்பே தள்ளப்பட்டன. தேவன் இனி ஒரு போதும் அவைகளை நினைவு கூருவதில்லை. என்ன? நம்முடைய பாவங்கள் இனி ஒரு போதும் நினைவு கூரப்படமாட்டாது என்று அறிவதினால், சபையானது இந்தக் காலையில் களிகூரவேண்டியதாயிருக்கிறது. அவைகள் மறதியின் கடலிலுள்ள, உயிர்த்தெழமுடியாத இடத்தில் உள்ள கல்லறைக்குள்ளாக போடப்பட்டிருக்கின்றன. அவைகள் என்றென்றைக்குமாய் மரிக்கப்பட்டும், அதைக் குறித்து மறக்கப்பட்டுமிருக்கின்றன. அவைகள் ஒருபோதும் சம்பவித்திராதது போன்றே இருக்கின்றன. “மரிக்கும் போது, அவர் என்னை இரட்சித்தார். ஆனால், அடக்கம் பண்ணப்பட்ட போது, அவர் என் பாவங்களை அதிதூரம் கொண்டு போய்விட்டார்”. அவைகள் மறதியின் கடலுக்குள்ளாக செல்லுமளவிற்கு அவர் அவைகளை தொலைதூரம் கொண்டு போய்விட்டார். ஓ! அந்தக் காரியங்கள் மிக உறுதியாக நமது மத்தியில் விசுவாசிக்கப்படுகின்றன என்று நாம் அறிவோம், அவைகள் மிக உறுதியான சத்தியமாய் இருக்கின்றன. அவைகள் தேவனுடைய சத்தியமாய் இருக்கின்றன. அந்த மகத்தான காரியங்கள் யாவும் மானிட வெளிப்படுத்தல்களுக்கு அப்பாற்பட்டதாய் இருக்கின்றன. நாம் ஒருபோதும் அத்தகைய காரியங்களுக்கான நம்முடைய நன்றியை வெளிப்படுத்திக் கூற முடியாது. 42 ஆனால், ஓ, அந்த ஈஸ்டர், “உயிர்த்தெழுந்த போது, அவர் இலவசமாய் என்றென்றைக்குமாய் நீதிமானாக்கினார்.” ஜீவிக்கும் போது, அவர் என்னை நேசித்தார் மரிக்கும் போது, அவர் என்னை இரட்சித்தார். அடக்கம் பண்ணப்பட்ட போது, அவர் என் பாவங்களை அதிதூரம் கொண்டு போய்விட்டார். (அது எல்லாம் சரிதான்) ஆனால் உயிர்த்தெழுந்த போது, அவர் என்னை நீதிமானாக்கினார்… 43 அந்த உயிர்த்தெழுதல் என்னவாயிருந்தது? அது தேவனுடைய இரசீதாய், செலுத்தப்பட்ட இரசீதாயிருந்தது. “உயிர்த்தெழுந்த போது, அவர் இலவசமாய் என்றென்றைக்குமாய் நீதிமானாக்கினார்”. ஓ, என்ன ஒரு இரட்சகர், உயிர்த்தெழுதல்! தேவன் என்ன செய்திருந்தார்? ஒரு மனிதன் தீமைக்கு ஆளாக முடியும், ஒரு மனிதன் மரிக்க முடியும், ஒரு மனிதன் அடக்கம் பண்ணப்பட முடியும், ஆனால் உயிர்த்தெழுதலோ அவைகள் எல்லாவற்றிலும் மகத்துவமானதாய் இருந்தது. ஏனென்றால் அது தேவனுடைய அங்கீகாரமாயிருந்தது; “என்னுடைய நியமனங்கள் சந்திக்கப்பட்டுள்ளன, என்னுடைய தேவைகள் சந்திக்கப்பட்டுள்ளன. அது அவரே!” அவர் மரித்தோரிலிருந்து எழுந்தார்! “உயிர்த்தெழுந்த போது, அவர் என்றென்றைக்குமாய் நீதிமானாக்கினார்”. அவருடைய பரிசுத்த நாமம் ஸ்தோத்தரிக்கப்படுவதாக! 44 அது உணர்ச்சி வேகங்களைக் கொண்டு வருகிறதில் வியப்பொன்றுமில்லையே! மனித இருதயம் அதை அடக்கி வைக்க முடியாததில் வியப்பொன்றுமில்லையே! ஓ, நம்முடைய ஜெயங்கொள்ளுகிற விசுவாசத்தோடு நாம் அக்கரையில் நின்று “நாம் இலவசமாய் என்றென்றைக்குமாய் நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறோம்” என்று கூற முடியும், ஏனென்றால் அவர் மரித்து, அடக்கம் பன்ணப்பட்டார், தேவன் அவரை ஈஸ்டர் காலையென்று மீண்டுமாய் உயிரோடெழுப்பினார். பின்னர், அது ஏற்றுக் கொள்ளப்பட்டது என்று தேவன் காண்பித்தார், எல்லாக் காரியங்களையுமே அவர் செய்தார். ஒவ்வொரு காரியமும் இலவசமாய் செலுத்தப்பட்டது. இப்போது உங்களால் சுயாதீனமாகச் செல்ல முடியும்! “உயிர்த்தெழுந்த போது, அவர் இலவசமாய் என்றென்றைக்குமாய் நீதிமானாக்கினார்”. ஓ, ஒருவரும் அதை ஒரு போதும் அறிந்து கொள்ள முடியாது, அந்த உயிர்த்தெழுந்த மகத்தான நாளைக் குறித்து ஒரு போதும் சிந்திக்கவே முடியாதே! தூதர்கள் அதைக் கண்டனர். வானாதி வானங்களில் தூதர்கள் தேவனுடைய துதிகளைப் பாடி களிகூர்ந்தனர்; பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் பரதீசில் “அல்லேலூயா!” என்று ஆரவாரமிட்டனர். “உயிர்த்தெழுந்த போது அவர் நீதிமானாக்கினார்.” அந்த மகா சத்தம் உண்டாகி, அவர் கல்லறையிலிருந்து எழும்பின போது, வானங்கள் அதிர்ந்தன, பூமி அதிர்ந்தது, பரதீசு அதிர்ந்தது, பரலோகம் அதிர்ந்தது! “உயிர்த்தெழுந்த போது, அவர் இலவசமாய் என்றென்றைக்குமாய் நீதிமானாக்கினார்.” ஓ, என்னே! 45 அப்படியானல், அக்கரையிலே அவர் என்ன செய்தார் என்ற அந்த வியப்புக்கேதுவான கிருபையை நாம் நோக்கிப் பார்க்கும் போது, அவருக்குள் மரிக்கின்ற பரிசுத்தவான்கள் இதை பாட முடியும். பார்த்தீர்களா? தேவனுடைய முத்திரையிட்ட அங்கீகாரம். இயேசு, “நான் கூறுகிறது உண்மையாய் இருக்கிறதென்றும், தேவன் கூறினது உண்மையாய் இருக்கிறது என்ற ஒரு சான்றாதாரமாயும், ஒரு உறுதிபாட்டின் காரணமாயும் இன்னும் கொஞ்சக் காலத்திலே உலகம் என்னைக் காணாது, நீங்களோ என்னைக் காண்பீர்கள், ஏனெனில் நான் மரித்தோரிலிருந்து எழுந்து உலகத்தின் முடிவு பரியந்தமும் உங்களோடும், உங்களுக்குள்ளும் இருப்பேன்” என்றார். “நான் பரிசுத்தாவியின் ரூபத்தில் வருவேன். நான் என்னுடைய இருப்பிடம் உங்களோடிருக்கும்படியாகவும், என்றென்றைக்குமாய் உங்களோடு ஜீவிக்கும்படியாகவும் செய்வேன்.” அப்பொழுது உயிர்த்தெழுதலின் நம்பிக்கையை தங்களுடைய இருதயங்களில் கொண்டிருக்கிற பரிசுத்தவான்களாய் இந்தப் பாடலைப் பாட முடியும். அந்தப் பிரகாசமான, மேகமற்ற காலையில் கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் எழும்பும் போது, அவருடைய மகிமையின் உயிர்த்தெழுதலில் பங்கடைவர்; அவருடைய தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் ஆகாயத்திற்கு அப்பாலுள்ள தங்கள் வீடுகளில் ஒன்று கூடும் பொழுது (ஒரு பரிபூரண நிச்சயத்தோடு, தேவனுடைய முத்திரையோடு, தேவனித்திலிருந்து தாமே எழுதப்பட்ட ஒரு வரவுச் சீட்டோடு அக்கரையில் பெயர்பட்டியல் வாசிக்கப்படும் போது, நான் அங்கிருப்பேன். (ஓ, விரைவில் வருகிறதே!) ஓ, அவர்கள் கூறினதில் வியப்பொன்றுமில்லையே; ஜீவிக்கும் போது, அவர் என்னை நேசித்தார், மரிக்கும் போது அவர் என்னை இரட்சித்தார் அடக்கம் பண்ணப்பட்ட போது, அவர் என் பாவங்களை அதிதூரம் கொண்டு போய் விட்டார். ஓ! உயிர்தெழுந்த போது, அவர் இலவசமாய் என்றென்றைக்குமாய் நீதிமானாக்கினார். 46 பாவங்கள் மன்னிக்கப்பட்டன. இந்த பலிகள் யாவும் ஆதாரமற்றதாய் இருந்திருக்கலாம், இந்த பலிகள் அனைத்துமே தவறிப் போயிருந்திருக்கலாம். ஆனால் உயிர்த்தெழுந்த காலையில், அவர் உயிர்த்தெழுந்த போது, தேவன் அதை அவர் ஏற்றுக் கொண்டார் என்று நிரூபித்தார். அது மானிட இருதயத்திற்கு ஒரு அல்லேலூயாவை கொண்டு வருகிறதில் வியப்பொன்றுமில்லையே! அது மரணத்தின் முகத்தில் மனிதர்களை நிற்கச் செய்கிறதில் வியபொன்றுமில்லையே! இல்லாதிருந்தவைகளை, அவைகள் இருப்பது போன்றே ஜனங்களை அழைக்கச் செய்கிறதே! ஆனால் ஏன்? “உயிர்த்தெழுந்த போது, அவர் நீதிமானாக்கினார்”. அவர் உயிர்த்தெழுந்திருக்கிறார் என்று நீங்கள் எப்படி அறிவீர்கள்? அவர் நம்முடைய இருதயங்களில் உயிர்த்தெழுந்திருக்கின்ற காரணத்தால், இலவசமாய் என்றென்றைக்குமாய் நீதிமானாக்கினாரே! 47 நாற்பது நாட்கள் கழித்து, அவர் நின்று கொண்டு, தம்முடைய பிள்ளைகளிடத்தில் பேசிக் கொண்டிருந்த போது, புவிஈர்ப்பு விசையானது அதனுடைய படியிலிருந்து தளரத் துவங்கினது. வேலைகள் முடிக்கப்பட்டிருந்தன. அபராதம் செலுத்தப்பட்டிருந்தது. அவர் தம்முடைய கையில் வரவுச் சீட்டை வைத்திருந்தார். அது தேவனுடய வரவுச் சீட்டாய் இருந்தது. அவர் பிள்ளைகளையும் சபையையும், விசுவாசிகளையும் உடையவராயிருந்தார். பாவம் யாவும் ஜெயிக்கப்பட்டாயிற்று. வழியானது செவ்வையாக்கப்பட்டிருந்தது. அவர் இனி பூமியின் மேல் தரித்திருக்க முடியாத நிலையாயிற்று. நம்மை இங்கு என்ன பற்றிக் கொண்டிருக்கிறது? புவியீர்ப்பாற்றல், புவியீர்ப்பாற்றல் தகர்வுறத்துவங்கி, அது தன்னுடைய பிடிகளை இழந்தது. ஏன்? அப்பொழுது அது அனைத்துமே முடிவுற்றிருந்தது. என்ன சம்பவித்தது? அவர் பூமியிலிருந்து எழும்ப ஆரம்பித்தார். 48 “நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்,” என்று அவருடைய உதடுகளிலிருந்து வெளிவந்தது. “நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள். விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான். விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்; நவமான பாஷைகளைப் பேசுவார்கள்; சர்ப்பங்களை எடுத்தாலும் அல்லது சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்களேயானால் அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள். ஏனென்றால் நான் ஜீவிக்கிறேன்…புவியீர்ப்பாற்றல் என்னிடத்திலிருந்து தெறித்தோடிவிட்டது. பாவத்திற்கு பிடிப்பேயில்லை. நான் உங்களுக்காக மரித்தேன். தேவன் அதை நிரூபித்து, உயிர்த்தெழுதலின் வரவுச் சீட்டை கொடுத்தார். நான் ஜீவிக்கின்றபடியால் நீங்களும் கூட ஜீவிக்கின்றீர்களே! என்றோ ஒரு நாள் நான் திரும்ப வருவேன்”. 49 என்றோ ஒரு நாள் அவர் வருகிறார், ஓ, மகிமையான நாள்! அப்பொழுது ஒன்று…ஜீவிக்கும் போது, மரிக்கும் போது, அடக்கம் பண்ணப்பட்ட போது, வரும் போது என்பது இன்றைக்கு சபையின் நம்பிக்கையாயிருக்கிறதே! ஜீவிக்கும் போது, அவர் என்னை நேசித்தார், மரிக்கும் போது, அவர் என்னை இரட்சித்தார். அடக்கம் பண்ணப்பட்ட போது, அவர் என் பாவங்களை அதிதூரம் கொண்டு போய் விட்டார். உயிர்த்தெழுந்த போது, அவர் இலவசமாய் என்றென்றைக்குமாய் நீதிமானாக்கினார். என்றோ ஒரு நாள், அவர் வருகிறார், ஓ! மகிமையான நாள்! அது என்ன? ஆங்கில ஐந்து எழுத்துக்களில் ஐந்து காரியங்கள்: இ-யே-சு (J-E-S-U-S) ஜீவிக்கும் போது, அவர் என்னை நேசித்தார். மரிக்கும் போது, அவர் என்னை இரட்சித்தார். அடக்கம் பண்ணப்பட்ட போது, அவர் என் பாவங்களை அதிதூரம் கொண்டு போய் விட்டார். உயிர்த்தெழுந்த போது, அவர் இலவசமாய் என்றென்றைக்குமாய் நீதிமானாக்கினார். என்றோ ஒரு நாள் அவர் வருகிறார், ஓ, மகிமையான நாள்! 50 நாம் அவருடைய இரண்டாம் வருகைக்காக எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறோமே! “இந்த பிரகாசமான மேகமற்ற ஏதோ ஒரு காலைகளில் கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் எழும்பும் போது, அந்த உயிர்த்தெழுதலின் மகிமையில் பங்கடைவார்கள்! அவருடைய தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் ஆகாயத்திற்கு அப்பாலுள்ள தங்கள் வீடுகளில் கூடும் போது, அக்கரையிலே பெயர்ப்பட்டியில் வாசிக்கப்படும் போது நான் அங்கிருப்பேன்.” ஏன்? நான் அந்த வரவுச் சீட்டை வைத்திருக்கிறேன். அவர் உயிர்த்தெழுந்தாரே! நீ எப்படி அறிவாய்? அவர் என் இருதயத்தில் ஜீவிக்கிறார். அவர் தம்முடைய விசுவாசமுள்ள சபையின் இருதயத்தில் ஜீவிக்கிறார். 51 நண்பர்களே, அதைக் குறித்து சிந்தியுங்கள். நாங்கள் திரும்பி வந்தவுடனே ஞானஸ்நான ஆராதனைக்காக வெதுவெதுப்பான தண்ணீரோடு சரியாக ஒரு சில நாட்களில் தண்ணீர் தொட்டி ஆயத்தமாயிருக்கும். இப்பொழுது சரியாக ஒரு விநாடி நாம் நம்முடைய தலைகளை வணங்குவோமாக. 52 நமது மத்தியில் எவரொருவராவது அல்லது இந்த பலி ஏற்றுக் கொள்ளப் போதுமானதென்று அதை பாராட்டாதிருக்கின்ற அநேகர் இன்னமும் இருந்தால், தேவன் உங்களுடைய இருதயத்தில் விநோதமாய் பேசும்படியாயும், உங்களுடைய ஆத்தும சுத்திகரிப்பான அவருடைய பலியை நீங்கள் ஏற்றுக் கொள்ளும்படியாய், ஜெபத்தில் நினைவு கூரப்பட வேண்டுமென்று நீங்கள் விரும்புவீர்களா என்று இன்று நான் வியக்கிறேன். 53 நாம் புதிய தொப்பிகளை அணிந்து கொள்ளவும், புதிய ஆடைகளை அணிந்து கொள்ளும்படியான ஒரு நேரத்தை இன்று கொண்டாடவில்லை என்பது நினைவிருக்கட்டும்; அது சரிதான், அது புதிதான ஏதோ காரியத்தின் ஒரு அடையாளமாய் இருக்கிறது. தேவன் புதிதான ஏதோ ஒன்றை செய்தார். அது சரிதான். அது மட்டுமல்ல அது. உயிர்த்தெழுதல் அதை குறிப்பிடவில்லை. அதாவது ஈஸ்டர் முயல்களை வேட்டையாடுதல் அல்லது சிறிய முட்டைகள் மற்றும் வெள்ளை கோழிக்குஞ்சுகள் போன்றவையல்ல அதன் கருத்து, சகோதரனே. 54 ஈஸ்டர் ஒரு வாகை விழாவாய் இருக்கிறது. அது மரித்தோரிலிருந்து தம்முடைய சொந்த குமாரனை அவர் எழுப்பினார் என்பதற்கு தேவன் பூமியின் மேல் கொடுத்த வெற்றியாய் இருக்கிறது. “அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப் போகாமல் நித்திய ஜீவனை அடைவான்”. 55 உயிர்த்தெழுதல் உங்களுடைய சொந்த ஜீவியத்தில் இருக்க முடியும். நீங்கள் அதைப் பெற்றிருக்கவில்லையென்றால், இந்தக் காலையில் நீங்கள் உங்களுடைய கரத்தை அவருக்கு உயர்த்தி, நீங்கள் உங்களுடைய தலைகளை வணங்கியிருக்கையில், “தேவனே. உயிர்த்தெழுதலின் ஜீவன் (அது) என் இருதயத்தில் இருக்கும்படியாக, என்னை நினைவு கூறும்” என்று கூறுங்கள். “சகோதரன் பிரான்ஹாம், என்னுடைய கரத்தை உயர்த்தியிருக்கின்ற காரணத்தால், எனக்காக ஜெபியுங்கள் என்று கூறி, உங்களுடைய கரத்தை நீங்கள் உயர்த்துவீர்களா? கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. வேறு யாராவது உங்களுடைய கரத்தை உயர்த்தி, “சகோதரனே, எனக்காக ஜெபியுங்கள், நான் இந்த உயிர்த்தெழுதலின் ஜீவனை ஏற்றுக் கொள்ள விரும்புகிறேன்” என்று கூறுவீர்களா? அந்தப் பிரகாசமான மேகமற்ற காலையில், (இப்பொழுது நாம் இங்கிருக்கையில் அதைக் குறித்து சிந்தியுங்கள்…?)…கிறிஸ்துவுக்குள் எழும்பி, மகிமையின் உயிர்த்தெழுதலில் பங்கடைவர்; தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் அக்கரையில் கூடும் போது, அக்கரையிலே பெயர்பட்டியல் வாசிக்கப்படுகின்ற போது, நான் அங்கிருப்பேன். அக்கரையிலே பெயர்பட்டியல் வாசிக்கப்படுகின்ற போது, அக்கரையிலே பெயர்பட்டியல் வாசிக்கப்படுகின்ற போது, (இப்பொழுது நீங்கள் நிச்சயமில்லாதவர்களாய் இருந்தால், இப்பொழுதே, அதை சரிபடுத்திக் கொள்ளுங்கள்)… அக்கரையில் வாசிக்கப்படும் போது அக்கரையில் பெயர் பட்டியல் வாசிக்கப்படுகின்ற போது நான் அங்கிருப்பேன். (இது புதிய பரிசுத்தவான்கள்)…சூரிய அஸ்தமனம் வரை, நாம் எஜமானுக்காக உழைப்போமாக… நாம்…பேசுவோமாக 56 இப்பொழுது, கிறிஸ்தவர்களாயிருக்கிற நீங்கள், அதிகமாக உழைக்க வேண்டுமென்று தேவனித்தில் ஒரு பொருத்தனையை செய்ய விரும்புகிறவர்கள், அவருக்குத் தெரிவிக்கும்படியாய் உங்களுடைய கரத்தை உயர்த்துங்கள். அக்கரையிலே பெயர்பட்டியல் வாசிக்கப்படுகின்ற போது, நான் அங்கிருப்பேன். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. அக்கரையிலே பெயர்பட்டியல் வாசிக்கப்படுகின்ற போது, அக்கரையிலே பெயர்பட்டியல் வாசிக்கப்படுகின்ற போது, அக்கரையிலே பெயர்பட்டியல் வாசிக்கப்படுகின்ற போது, அக்கரையிலே பெயர்பட்டியல் வாசிக்கப்படுகின்ற போது, நான் அங்கிருப்பேன். 57 அன்புள்ள தேவனே, நீர் இங்குள்ள ஒவ்வொரு இருதயத்தையும் கண்டிருக்கிறீர், நீர் உள்ளெண்ணங்களையும் குறிகோள்களையும் அறிவீர். நான் இரக்கத்திற்காக ஜெபிக்கிறேன். தேவனே, அந்த இரக்கம் இந்த ஜனங்களுக்கு காட்டும்படியாய் அதை அருளும். அவர்கள் இந்த வேளையின் ஆராதனைக்காக இந்த காலை வந்திருக்கின்றனர். அவர்கள் உம்முடைய வார்த்தையை கேட்கும்படியாய் இந்த இடத்திற்கு வந்திருக்கிறார்கள், நாங்கள் அதை பேசியிருக்கின்றோம். 58 நீர் ஜீவித்த, உம்முடைய ஜீவியம் போன்ற ஒரு ஜீவியம் ஒரு போதும் இருந்ததேயில்லை. மரித்த போது, நீர் ஒருவர் மட்டுமே அந்தவிதமாக மரிக்கக் கூடியவராக இருந்தீர். நீர் அடக்கம் பண்ணப்பட்ட போது, நீர் எங்களுடைய பாவங்களை தொலைதூரம் கொண்டு சென்றீர்; ஜனங்களுடைய பாவங்கள் உம்மேல் வைக்கப்பட்டிருக்கையில், நீர் அவைகளை மறதியின் கடலுக்கு கொண்டு சென்றீர். ஆனால், உயிர்த்தெழுந்த போது, நீர் இலவசமாய் என்றென்றைக்குமாய் நீதிமானாக்கினீர். நாங்கள் உம்முடைய வருகைக்காக காத்து நிற்கிறோம். 59 தேவனே அவர்களை ஆசீர்வதியும். எங்களுக்கு உதவி செய்யும். நாங்கள் இன்னும் அதிக கூடுதலான நேரமில்லாதவர்களாய் இருப்பதை நாங்கள் உணருகிறோம். எப்படியும்…இப்பொழுதிலிருந்து ஒரு மணி நேரத்திற்குள், விஞ்ஞானிகளின் படி, தேசங்களே இல்லாமற் போகக் கூடும். தேவனே நாங்கள் இந்த ஈஸ்டர் காலையில் சபையின் நம்பிக்கையான அவருடைய வருகையின் வாசற்படியின் மேல் நிற்கின்ற காரணத்தால் நாங்கள் ஜெபிக்கிறோம். அநேக ஆயிரக் கணக்கானோர் அக்கரையில் பூமியின் தூளில் படுத்துக் கொண்டு, அந்த நேரத்துக்காக காத்துக் கொண்டிருக்க, பலிபீடத்தின் கீழுள்ள அவர்களுடைய ஆத்துமாக்கள், “எதுவரைக்கும், கர்த்தாவே? எதுவரைக்கும்?” என்று சத்தமிட்டுக் கொண்டிருக்கிறார்கள். தேவனே நீர் எங்களிடம் பேச வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன். நாங்கள் இங்கே பூமியின் மேல் எப்போதும் என்ன செய்கிறோம் என்பது முக்கியமல்ல, அது மிகவும் அற்பமாயிருக்கிறது என்பதை நாங்கள் நினைவு கூறுவோமாக. இப்பொழுது நாங்கள் செய்யக் கூடிய ஒரே காரியம் உம்முடைய வருகைக்காக காத்திருப்பதும், ஒவ்வொருவரிடமும் அதைக் கூறுவதுமேயாகும். செய்தியானது அவசரமானதாய் இருக்கிறது. நீர் எந்த நேரத்திலும் வரலாம் என்பதை துரிதமாக நாங்கள் அதை ஜனங்களிடத்திற்கு சென்றடையச் செய்வோமாக. அவர்கள் பேசிக் கொண்டிருக்கிறதான இந்த வெடிகுண்டுகளும், இந்த ஏவுகணைகளும், அவைகளில் ஆயிரக்கணக்கான குண்டுபொழிவுகளும் முன்னதாகவே ஒரு நிமிட நேரத்தில் பூமியின் மேல் விழக்கூடும்; அது சம்பவிக்கிறதற்கு முன்னமே, கர்த்தாவே, நீர் உம்முடைய ஜனங்களை கொண்டு செல்ல வருவதாக வாக்களித்திருக்கிறீர். கர்த்தாவே, அது அந்தவிதமாகவே இருக்கும். ஆகையால் பெரும்பாலும் எந்த நிமிடத்திலும் ஒரு உயிர்த்தெழுதல், சபைக்கான ஒரு உயிர்த்தெழுதல் இருக்கக் கூடும்; கிறிஸ்து மூலமாக இந்த பாவ ஜீவியத்திலிருந்து நித்திய ஜீவனுக்குள்ளான ஒரு உயிர்த்தெழுதல். எங்களுடைய ஜெபங்களைக் கேளும். 60 இன்றைக்கு, நாங்கள் மற்ற ஆராதனைகளுக்கு, ஞாயிறு பள்ளி உபதேசத்திற்கு போகையிலே, ஓ கர்த்தாவே, அநேக இருதயங்கள் விநோதமாக எச்சரிக்கப்படும் படி மீண்டுமாய் பேசும். அவர்கள் இந்த உயிர்த்தெழுந்த காலையில், கர்த்தராகிய இயேசுவோடு அடக்கம் பண்ணப்படும்படியாகவும், அவருடைய பலியை ஏற்றுக் கொள்ளும்படியாகவும் இந்தத் தொட்டியண்டை இந்தக் காலையில் பன்னிரண்டன் தொகுதிகளாக வருவார்களாக. அவர்கள் எந்த சபையை சேர்ந்தவர்களென்றோ, அல்லது அவர்கள் எந்த மதக்குழுவோடு ஐக்கியங் கொண்டுள்ளனர் என்பது முக்கியமல்ல, அது ஒன்று மற்றதாய் கருதப்படுகிறது. ஆனால் அவர்கள் அந்த பலியை ஏற்றுக் கொண்டிருக்கின்றனரா? அவர்கள் நல்லவர்கள் அல்லவென்றும், இயேசு ஒருவர் மட்டுமே நல்லவராக இருந்தார் என்று அவர்கள் அறிக்கையிட்டுக் கொண்டிருக்கிறார்களா? அவர் எங்களுடைய ஸ்தானத்தில், எங்களுக்காக மரித்தார். அவர் எங்களுடைய பாவங்களை எடுத்துக் கொண்டு அவைகளை அடக்கம் பண்ணினார், நாங்கள் அவருக்குள் தனிமையாக நிற்கிறோம். எங்களுடைய சபைகள் எங்களுடைய பாவங்களை அடக்கம் பண்னமுடியாது, எங்களுடைய ஜீவியம் எங்களுடைய பாவங்களை அடக்கம் பண்ண முடியாது, ஆனால் கிறிஸ்துவோ எங்களுடைய பாவங்களை மறதியின் கடலில் அடக்கம் பண்ணினார். தேவனே, இப்பொழுது இந்தக் காரியங்கள் உம்முடைய பார்வையில் மகிமையானதாய் இருக்கும்படி அருள்புரியும். 61 அப்படியானால் இன்றிரவு, கர்த்தாவே, நீர் உம்முடைய உயிர்த்தெழுதலின் வல்லமையில் வந்து இந்த சிறிய இடத்தை அது ஒருபோதும் அசைக்கப்படாதிருக்கின்ற வண்ணமாய் அசைப்பீராக. அடையாளங்களும், அற்புதங்களும் வெளிப்படையாக புலப்படுவதாக. இரண்டு ஞாயிறுகளுக்கு முன்பு, கர்த்தாவே, வியாதியஸ்தர்களும் அவதியுற்றிருந்தவர்களும் மிகவும் அற்புதமாக சுகமாக்கப்பட்ட போது அது இருந்ததை போன்றே, அதைச் திரும்பச் செய்யும். கர்த்தாவே, அது மீண்டுமாய் இன்றிரவு உம்முடைய மகிமைக்காக இருக்க வேண்டுமென்று நாங்கள் ஜெபிக்கிறோம். 62 எங்களுடைய தப்பிதங்களை இப்பொழுது எங்களுக்கு மன்னியும், கர்த்தாவே, இது எங்களில் சிலருக்கு ஒரு உண்மையான உயிர்த்தெழுதலாக, எங்கள் எல்லோருக்குமே ஒரு உண்மையான உயிர்த்தெழுதலாக இருப்பதாக. ஈஸ்டரின் ஆசீர்வாதங்கள் என்னவாயிருந்தன என்பதை ஒருபோதும் அறியாதிருக்கின்ற சிலருக்கு கிறிஸ்து அவர்களுடைய இருதயங்களில் ஒரு புதிய நம்பிக்கையோடும், ஒரு புதிய ஜீவனோடும் எழும்புகிறதாய் இன்றைக்கு இது இருப்பதாக. அவர்களை கல்வாரிக்கு திசை திருப்பும். நாங்கள் இதை இயேசுவின் நாமத்தில் வேண்டிக்கொள்கிறோம். ஆமென். 63 [ஒலிநாடாவில் காலி இடம்—ஆசி.]…இந்த ஐக்கிய நேரத்தில் இருப்பதற்கு…உங்களில் எத்தனை பேர் கர்த்தரை நேசிக்கின்றீர்கள்? உங்களுடைய கரத்தை சற்று உயர்த்துங்கள். ஓ, என்னே, அது அற்புதமாயுள்ளது! 64 சகோதரன் மேக்டூவெல், நீர் பிரதிஷ்டை செய்யும்படியாக குழந்தையை வைத்திருப்பதாக நான் கேள்விப்படுகிறேன். நீங்கள் ஞாயிறுபள்ளி ஆராதனைக்காக திரும்ப வாருங்கள், உங்களால் வர முடியுமா? சரி, அது அருமையாயிருக்கும். உங்களுக்கு தடையேதும் இல்லாவிடில் அப்பொழுது நாம் குழந்தைகளை, இவ்வாறே அந்த நேரத்திலேயே பிரதிஷ்டை செய்வோம், அது சரியாயுள்ளது. 65 ஆகையால் இப்பொழுது நீங்கள் உங்களுடைய இடங்களுக்குச் சென்று உங்களுடைய காலையுண்டியை அருந்திவிட்டு, பின்னர் மீண்டுமாய் திரும்ப வரும்படியாக, ஒரு சில விநாடிகளில் நாங்கள் கூட்டத்தை விரைவாக முடிக்கப் போகிறோம். நீங்கள் இங்கு இருந்ததற்காக நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். 66 இப்பொழுது நாம் சற்று எழும்பி நிற்போமாக. ஒரு சில விநாடிகளுக்கு முன்பு நாம் பாடியிருந்த அதே பாடல், “அந்த பிரகாசமான, மேகமற்ற…” எத்தனை பேர் அந்த நம்பிக்கையை அவர்களுக்குள் வைத்திருக்கின்றனர், நீங்கள் உங்களுடைய கரத்தை உயர்த்துகிறதை நாங்கள் காண்போமாக. எழும்பி நில்லுங்கள். …அந்த பிரகாசமான மேகமற்ற காலையில் (அதை இப்பொழுது பாடுங்கள்) கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் எழும்பும் போது, அவருடைய மகிமையின் உயிர்த்தெழுதலில் பங்கடைவர்; பூமியில் இரட்சிக்கப்பட்டவர்கள் அக்கரையில் ஒன்று கூடும் போது…